ஊழல் தடுப்பு அமைப்பு சட்ட வரைவு மற்றும் அதன் அதிகார எல்லை குறித்த சமூக ஆர்வலர்கள் மக்கள் பிரதிநிதிகள் இடையிலான கலந்தாய்வு கூடுகைகள் மூன்று முறை நடந்து முடிந்திருகிறது.
ஊழல் ஒழிக்கப் பட வேண்டும் என்று அனைவரும் மிக அழகாக உரையாற்றுகிறார்கள்.
ஆனால்
ஊழல் செழித்து வறட்சி நிவாரணம் முதல் வெள்ள நிவாரணம் வழியாக சுனாமி நிவாரணம் வரையில் வளர்கிறது.
ஊழல் பீரங்கியில் துவங்கி சவப்பெட்டியில் ஊர்வலம் வந்து ஆதர்சுவில் நின்று சிரிக்கிறது.
ஊழல் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மதங்களின் பெயரால் எளிய மக்களை மோதவிட்டு பின்னால் நின்று ரத்தம் குடிக்கிறது.
ஊழல் இறையாண்மை என்ற ஒரு போர்வைக்குள் மறைந்து கொண்டு தன்னிலும் வேறுபட்ட தனக்கு சவால் விடக்கூடிய இனங்களை தந்திரமாக மொழி, பண்பாடு மற்றும் நாகரிக படையெடுப்பின் மூலம் சிதைக்கிறது.
ஊழல் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை தொழில் மயம், தொழில் வளர்ச்சி மற்றும் தொழில் புரட்சி என்ற பெயர்களில் ஒழித்து விட்டு, சுயமாக சொந்த வளங்களைக் கொண்டு சொந்த இடங்களில் உழைத்து சுயமரியாதையோடு வாழ்ந்த மக்களை தினக்கூலிகள் ஆக்குகிறது.
ஊழல் மனிதர்களையும் பொருட்களைப் போல வியாபாரப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் சந்தைப் படுத்தி ஆண்களையும் பெண்களையும் அவர்கள் விழிப்படைந்து உணர்வதற்குள் சுய ஆளுமையை சேதப்படுத்தி விடுகிறது.
இன்னும் ஏராளமான தீமைகளை அது தந்திரங்கள் சலுகைகள் வழியாக மக்களுக்குள் ஊடுறுவி செயல்படுத்துகிறது.
இவை எல்லாம் என்று மாறும் என ஒருவரைப் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டே விட்டுவிடாமல் துணைக்கண்டத்தின் ஒவ்வொரு தேசிய இனத்தின் எல்லா மக்களும் முயன்று ஊழல் தடுப்ப்பு மக்கள் நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்த பங்கள்ளிபைச் செய்யவேண்டும்.
இவை எல்லாம் என்று மாறும் என ஒருவரைப் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டே விட்டுவிடாமல் துணைக்கண்டத்தின் ஒவ்வொரு தேசிய இனத்தின் எல்லா மக்களும் முயன்று ஊழல் தடுப்ப்பு மக்கள் நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்த பங்கள்ளிபைச் செய்யவேண்டும்.
No comments:
Post a Comment