Monday, August 23, 2010

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் என்று குறளிலும், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பிற்காலத்திலும், விவசாயம் முதன்மைப் படுத்திப் பாடப் பட்டுள்ளது. ஆனால் விவசாயம், விவசாயி என்ற வார்த்தைகளும் அந்த வார்த்தைகளின்  தாக்கங்களும், நவீன காலச் சமூகத்து மக்களிடம் எந்த விதமான உணர்வினையும் ஏற்ப்படுத்துவது இல்லை. இயற்கை விவசாயமும் அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளும் முழுமையாகப் புறக்கணிக்கப் படுகிறது. குறிப்பிட்டுச் சொல்லும் படியான நீர்ப் பாசனத் திட்டங்கள் பெயரளவுச் சுதந்திரத்திற்குப் பிறகு  ஒன்றும் இல்லை.

பெரும்முதலீட்டுத் தொழில்கள் மற்றும் அயல் நாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொல்லி அதிகமான சலுகைகளை அரசிடம் பெற்றுக் கொள்கின்றனர். தங்களிடம் பணி புரிபவர்களுக்கு ஒரு வித உரிமையும் கொடுக்காமல் மிகுந்த மன நெருக்கடிக்குள் வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் விவசாயம் விவசாயி மற்றும் பிற தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் யாருக்கும் அனுகூலமில்லாத ஒரு காலமாக தற்போதைய ஓருலக வணிகக் கொள்கையானது மாற்றம் பெற்றுள்ளது.

எனவே அரசும் மக்களும் மிகவும் கவனமாகச் சிந்தித்து செயல் பட வேண்டும். நமக்கு மிகவும் அவசியமான உணவுப் பொருட்கள் உற்பத்தி தடையின்றி நடைபெறும் வகையில் நீராதாரம் மற்றும் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில் துறையில், தரமான அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வியை, ஆர்வமுள்ள யாவரும் முறையாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஆவன செய்ய வேண்டும். அதன் மூலம் நம்முடையவர்களே சுயமாக தொழில் நிறுவனங்களை நிறுவி, மெய்யான மற்றும் நிலையான தொழில் வளர்ச்சி நாட்டில் ஏற்ப்படும்.

அந்நிய விவசாய மற்றும் தொழில் நிறுவனங்கள் நமது சுயச்சார்பை அனைத்து விதத்திலும் இல்லாது செய்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகக் கருதி விரைந்து செயல்பட்டு வென்று முடிக்க வேண்டும்.

Saturday, August 21, 2010

ஒதுக்கீடா அல்லது பங்கீடா

மாநிலங்கள் மற்றும் மாநிலங்களின் ஒன்றியம், ஆகிய இரண்டு நிர்வாகங்களின் நிறுவனங்கள் மற்றும் துறைகளில், உள்ள அனைத்து விதமான வாய்ப்புக்களையும், சமூக நீதி அடிப்படையில் நியாயமாகப் பிரித்து அளிக்கும் போது, அதை ஒதுக்கீடு என்று சொல்லாமல் பங்கீடு என்று சொன்னால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் தெளிவும் வலுவும் கிடைக்கும். நன்றி.

Friday, August 20, 2010

நன்றி நன்றி

மருத்துவக்  கல்லுரி மாணவர் சேர்க்கைக்கு துணைக்கண்டம் முழுமைக்கும் பொது நுழைவுத் தேர்வு என்ற மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) (Indian Union) முன் வைக்கும் திட்டத்திற்கு தமிழ் நாட்டின் முதல் நிலைக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது தமிழ் நாட்டு மக்களின் மனமுவந்த வரவேற்பைப் பெரும். இது போல இலங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு மேலும் ஒன்றியத்தின் பிற திட்டங்களில் எல்லாம் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்றால் மக்களின் நெஞ்சார்ந்த நன்றிக்கு உரியவர்களாய் இருப்பார்கள்.

Tuesday, August 17, 2010

உளுந்த வடை

என் மகள் இரண்டு வயதில் அருகில் உள்ள கடைக்கு கூட்டிச் சென்று உளுந்து வடை வாங்கிக் கொடுத்தேன். இது என்ன என்று கேட்டாள். நான் உளுந்த வடை என்று பதில் சொன்னேன். அவள் உடனடியாக கீழே உளுந்த வடையா என்று கேட்டாள். நான் திடுக்கிட்டு இல்லை அம்மா அது உளுந்து மாவில் செய்த வடை என்று சொன்னேன். இப்போதும் அவளிடம் வடை கொடுக்கும் போது சிரித்துக் கொண்டே கீழே விழாத வடை என்று சொல்லுவேன்.

Monday, August 16, 2010

விடுதலை

தளைகளில் இருந்து வேண்டும் விடுதலை
தமிழனின் அவமானங்களில் இருந்து வேண்டும்  விடுதலை
இலங்கை தமிழனின் இன்னலில் இருந்து வேண்டும் விடுதலை
தமிழ் நாட்டு தமிழனுக்கு டாஸ்மார்க்கில் இருந்து வேண்டும் விடுதலை
உலகத்து மக்கள் எல்லோருக்கும் பொருளாதார சுரண்டலில் இருந்து வேண்டும் விடுதலை

பயந்து அல்ல

பயந்து அல்ல
பாய்ந்து கொல்ல புலி
பதுங்கும் மெல்ல

Sunday, August 15, 2010

அன்புள்ள

அன்புள்ள அம்மா அப்பா எப்படி இருக்கீங்க.
எனக்கு உங்களை எப்போதும் பார்த்துக்கிட்டே இருக்க வேண்டும் போல இருக்கு.
நாங்கள் எல்லோரும் இங்கு நலமுடன் இருக்கிறோம். அடுத்த மாதம் உங்கள் எல்லோரையும் வந்து பார்ப்போம். நீங்கள் இருவரும் நன்றாக சாப்பிடுங்கள். தேவையான எதையம் எனக்கு சொல்லுங்கள். நான் அதை செய்து தருகிறேன்.

அன்பு மகன்
கா. யோவான்.